வரலாறு

வரலாறு

இந்த பகுதியில், இலங்கையின் சமீபத்திய வறட்சியின் வரலாறு முன்வைக்கப்படுகிறது. பொதுவாக இலங்கையில் வறட்சியால் அண்மையில் பாதிக்கப்பட்டுள்ள பொலன்னருவை மாவட்டத்தினை அடிப்படையாக கொண்ட ஆய்வு செய்யப்படுகின்றது.

 

வறட்சி

வறட்சி மற்றும் அதன் தாக்கங்கள் ஒரு சிக்கலான நிகழ்வாக கருதப்படுகின்றது ஆனால் தீவிர வறட்சி காலங்களில் காலநிலைக்கும் வறட்சியின் தாக்கங்களுக்கும் இடையில் மிகவும் தெளிவாக தொடர்பு உள்ளது. மக்கள் மீதான பாதிப்பு (நீர் அணுகல்), அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு (நீர் வழங்கல், சுகாதாரம், மனித-யானை மோதலின் அச்சுறுத்தல்கள்) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் இது தாக்கத்தினை கொண்டு வருகின்றது. வெவ்வேறு வீட்டுத்துறைகள், விவசாயிகள், தோட்டங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்போர்களிடையே வறட்சியின் பாதிப்பும் மற்றும் அதனை வறட்சியைத் தணிக்கும் திறன்கள என்பன வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கையில் அண்மையில் 2016 முதல் அக்டோபர் 2017 வரை நிலவிய வறட்சியின்படி இந்த வேறுபாட்டினை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இடஞ்சார்ந்த காரணிகள் மற்றும் பருவகால தன்மைகளில் மாறுபாடகள் காணப்படும் அதேவேளை திடீர் மழைவீழ்ச்சியானது வறட்சியை மாற்றியமைக்கலாம்.

வறட்சி தொடர்பிலான கண்காணிப்பில் ஆழமான புரிதல் மற்றும் சிறந்த திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பதற்காக தகவிலுள்ள ஆதாரங்கள் மற்றும் கருவிகளுடன் உண்மை நிலைமைகள் தொடர்பிலான ஒரு சுருக்கத்தை வழங்க நாங்கள் முயல்கிறோம். வரலாற்று ரீதியாக வறட்சியின் போது அரசு சமூக சேவைகள் அமைச்சின் கீழ் நீர், உணவு மற்றும் பயிர் நிவாரணம் மற்றும் பிற நிவாரணங்களை விநியோகித்து வருகின்றது. இங்கு இடரின் பின்னரான நடத்தைகளிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனவே இந்த பகுதியானது, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் கணிப்புகளை கண்காணிப்பது மட்டுமின்றி, பேரழிவு இடர் அபாயம் தொடர்பிலான எதிர்வுகூறல்களை முன்வைப்பதன் மூலம இடர் முகாமைத்துவத்திற்கு வலுசேர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

 

மழைவீழ்ச்சியும் வறட்சியும்

மழைவீழ்ச்சி மற்றும் அதன் வேறுபாடுகள் வறட்சியில் மிகவும் நேரடி செல்வாக்கைக் கொண்டுள்ளது. பொதுவாக மழைவீழ்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருந்தால், மக்கள்; மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் அக்காலநிலைக்கு பழக்கமாகிவிட்டால், இங்க வறட்சியின் தாக்கங்கள் ஏற்படும். மழைவீழ்ச்சி வேறுபாடு தொடர்பிலான வறட்சி கண்காணிப்புக்கள் காலத்திற்கு காலம் உரிய நேரத்தில் செய்யப்படல் வேண்டும். இதற்காக நாம் தேசிய அளவில் உற்பத்தி தரவுக் கொள்கைகள் மற்றும் விலையை நிர்ணயம் முதலான பல்வேறு நடைமுறைகளில் பணியாற்றி வருகின்றதோடு அவை தொடர்பிலான கண்காணிப்பை வெளிக்கொணர்ந்தும் வருகின்றோம். மழைவீழ்ச்சி பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கு நாம் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவு, இணையத்தளங்களில் அணுகக்கூடிய சில தரவு மற்றும் எங்களது சொந்த தானியங்கி வானிலை நிலையங்கள் (நாங்கள் தடையற்ற அணுகலை வழங்குகிறோம்) ஆகியவற்றை இணைக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

உதாரணமாக, படம் 1 இல், நடப்பு ஆண்டின் மழைவீழ்ச்சியை முந்தைய ஆண்டுகளின் மழைவிழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 2016 ஆம் ஆண்டில், மே 14-19 ஆம் தேதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, முந்தைய ஆண்டுகளில் காணப்பட்டதை விட மழைவீழ்ச்சியானது மிகவும் குறைவாகவே பதிவாகியிரப்பதனை நாம் காணலாம். எனினும் வழக்கமாக ஆண்டின் பிற்பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.

 

படம்: இலங்கையின் மழைவீழ்ச்சி
வேறுபாடு

செயற்கைக்கோள்கள் மற்றும் தரைத்தள அவதானிப்புகளிலிருந்து மதிப்பீடுகளின் படியான இலங்கையின் சராசரி மழைவீழ்ச்சியை படம் 1 காட்டிநிற்கின்றது. கடந்த 6 ஆண்டுகளாக ஜனவரி – டிசம்பர் வரையிலான மழைவீழ்ச்சி பாங்கானத கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. படம் 1 ஜனவரி, 2017 தொடக்கத்தில் இலங்கையில் ஏற்படும் என்பதை முன்னுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை முழுவதும் ஏப்ரல் மாதத்திலேயே மழைவிழ்ச்சியில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய மழைவீழ்ச்சி சராசரியை நீண்ட கால சராசரியுடன் ஒப்பிட்டு நோக்குவதானது வறட்சியைப் அவதானிப்பிற்கான ஒரு வெளிப்படையான வழியாகும். இச்செயன்முறையை படம் 2 இல் விளக்குகின்றது. இதன்படி, மழைவீழ்ச்சியானது நீண்டகாலமாக சராசரிக்கும் குறைவாகவே உள்ளது எனலாம்.

படத்தில் மெல்லிய வளைவானது, 2002-2018 ஆண்டு வரையிலான சராசரியைக் காட்டுகிறது – இந்த வருடாந்திர சுழற்சியானது ஒவ்வொரு ஆண்டுக்கும் மேற்கண்ட புள்ளிவிவரத்தில் மீள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சராசரியிலிருந்து விலகிச்செல்லும் ஈரமான மாதங்கள் (நீலம்) மற்றும் வறட்சியான மாதங்களாகவும் (பழுப்பு) காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மூன்றாகப் பிரிக்கப்படுவதால் ஒரு dekad சுமார் 10 நாட்கள் அளவில் கொண்டதாக அமைகின்றது.

இலங்கையின் காலநிலை கணிசமானளவில் பிராந்திய வேறுபாட்டைக் கொண்டுள்ளது – இதனை அடையாளங்காண நாம் படம் 3 இல் காட்டப்பட்டுள்ளதை போன்று மாதாந்த மழைவீழ்ச்சி வேறுபாடுகள் மூலம் காணலாம் – அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து விலகியிருக்கும். வரைபடங்கள் அதிக நுணுக்கத்தைக் கொண்டள்ளதுடன் இதற்கேற்ப
இவற்றை பிராந்திய அடிப்படையிலேயே வரைவிலக்கணம் செய்யவேண்டியும் ஏற்பட்டள்ளது.

படம் 3 ஆனது, இலங்கையின் மாதாந்த மழைவீழ்ச்சியின் வேறுபாடுகளை காட்டுகின்றது. மே மாதத்தில் பதிவான தீவிர மழைவீழ்ச்சியைத் தவிர 2016 ஆம் ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு சராசரி மழiவீழ்ச்சியை விடவும் குறைவாகவே இருந்தது என்பதைக் இப்படம் காட்டுகிறது.

2017 ஆம் ஆண்டில், எமது நாடு மார்ச், மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சராசரியை விடவும் உயர்வான மழைவீழ்ச்சியை பெற்றது. பெரும்பாலும் ஆண்டின் பிற்பகுதிகளில் சராசரி மழைவீழ்ச்சியை விடவும் குழறவாகவே பதிவாகியுள்ளமையையும் காணலாம். தரைத்தள அவதானிப்பு அடிப்படையிலான தரவுகளின் முடிவுகள் (படம் 3) மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகளின் என்பனவும் எங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன.

 

பொலன்னருவை மாவட்டத்திற்கான வறட்சி குறியீடுகள

2016 வறட்சியின் மையமாக இருந்த பொலன்னருவை மாவட்டமானது இலங்கைத்தீவின் வட மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. பொலன்னருவை மாவட்டத்தில் 2016 வறட்சியானது பல பயிர்களுடன் நெல் உற்பத்தியையும் மிகவும் கடுமையாக பாதித்தது. இதன்போது, பல நீர்த்தேக்கங்கள் வறண்டு போனமையால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

படம் 4: அக்டோபர் 2016 நிலவறரப்படி வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள்

புள்ளிவிவரங்கள் 7 மற்றும் 8 ஆகியவை வறட்சியின் தீவிரத்தன்மையை பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களையும்; நீர்த்தேக்கங்களில் சேமிக்கும் திறன்களை அடிப்படையாகக் கொண்டும் சித்தரிக்கின்றன.

 

படம் 5: பொலன்னருவை மாவட்டத்தின் இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களில் நிர் சேமிப்பு நிலை

ஆராய்ச்சியாளர்கள் வறட்சிகளின் ஆரம்பம், தீவிரம் மற்றும் முடிவை வரையறுக்க SPI மற்றும் WASP குறியீடு போன்ற பல கருவிகளை உருவாக்கியுள்ளனர். படம் 5 இல் வறட்சி குறித்த முடிவுகள் காட்டப்பட்டுள்ளன.

SPI குறியீடு

  • நியம மழைவீழ்ச்சி குறியீடு (SPI) McKee et al.,1993 என்போர்களால், இக்குறியீடு அடிப்படையில் வெவ்வேறு நேர அளவுகளில் வறட்சிகளை வரையறுத்து கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
  • SPI முறையில் n மாதங்களின் நகரும் சாராசரியை மாதாந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இங்கு n மழைவீழ்ச்சி திரட்டப்பட்ட காலத்தை குறிக்கிறது, பொதுவாக 1 முதல் 36 மாதங்கள் வரையிலான மாதாந்த உள்ளீட்டு தரவுகளை பயன்படுத்துகிறது.
  • இந்த அளவைப் பயன்படுத்தி, SPI குறியீடுகள் எதிர்மறையாக இருக்கும் போது வறட்சி ஆரம்பமானது முதல் மாதமாகவும் குறியீட்டு நேர்மறையாக மாறும்போது வறட்சி முடிவடைவதாகவும் வரையறுக்கப்படுகிறது.
  • வறட்சி நிகழ்வுகளின் காலப்பகுதியில் திரட்டப்பட்ட மழைவீழ்ச்சியின் பற்றாக்குறைகள் பயன்படுத்தி SPI குறியீடு கணக்கிடப்படுகின்றது.

 

படம் 6: பொலநறுவை மாவட்டத்தின் SPI குறியீடுகள்

WASP குறியீடுகள்

  • நிறையிடப்பட்ட நியம வேறுபாட்டு மழைவீழ்ச்சி குறியீட்டு (WASP) மற்றும் இது மாதாந்த மழைவீழ்ச்சி தரவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது
  • WASP நியம வேறுபாட்டு மழைவீழ்ச்சியானது குறிப்பிட்ட நேரத்தில் ஆண்டின் சராசரி வருடாந்திர மழையின் பெருக்கியின் அடிப்படையில் நிறையிடப்படுகின்றது.
  • குறியீட்டு -1 மற்றும் -2 க்கு இடையில் இருந்தால் அது “மிதமான வறட்சி” என்றும், -2 மற்றும் -3 க்கு இடையில் “மிகவும் வறட்சி” என்றும், குறியீட்டு – 3 க்கு கீழே இருந்தால் அது “கடுமையான வறட்சி” என்றும் வரையறுக்கப்படுகிறது.

பொலன்னருவை மாவட்டத்திற்கான WASP குறியீட்டின் முடிவுகள் படம் 7 இல் தரப்பட்டள்ளது.

 

படம் 7: பொலன்னருவை மாவட்டத்திற்கான WASP குறியீடுகள் (2001 முதலான தரைத்தள மற்றும் செய்மதி RFE தரவுகளை அடிப்படையாகக் கொண்டது).

 

இலங்கையில் எல்-நினோ மற்றும் லா- நினோவின் பங்கு

எல்-நினோ மற்றும் லா-நினோ அடிப்படையில் ஒப்பிடும்போது கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் மழைவீழ்ச்சி வேறுபாடானது சராசரியாக இருந்தது. இந்த வேறுபாடுகள் படம் 6 இல் காட்டப்பட்டுள்ளன.

 

படம் 8: எல் நினோ(El-Nino) மற்றும் லா நினா(La-Nina) கட்டங்களில் வெப்பநிலை.