வறட்சி சுட்டி

வறட்சி சுட்டி


வறட்சிக்கான சுட்டிஃகுறிகாட்டியாக நியம மழைவீழ்ச்சி குறியீட்டை (SPI) நாம் பயன்படுத்தலாம், இச்சுட்டியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதா என்பதை அடையாளம் காண பரவலாக பயன்படுகிறது.

SPI , எந்த நேர அளவிற்குமான மழைவீழ்ச்சியின் நிகழ்தகவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.:

SPI=(X-Xm) / σ

இங்கு,
= குறித்த நிலையத்திற்கான மழைவீழ்ச்சியின் அளவு
Xm = சராசரி மழைவீழ்ச்சி
σ = ஸ்ரீ நியம விலகல்
SPI வறட்சியின் வகைகள் SPI < -2.00 மிகக் கடுமையான வறட்சிdrought–1.50 < SPI< -1.99 கடுமையான வறட்சி -1.00 < SPI < -1.49 நடுத்தர வறட்சி drought-0.99 < SPI < 0.00 மிதமான வறட்சி

படம் 1, 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல், மே மற்றும் ஜுன்) நியம மழைவீழ்ச்சி சுட்டியை (SPI) காட்டுகிறது. இலங்கை பொதுவாக வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு முக்கிய காலநிலை பகுதிகளாகப் பிரித்து ஆய்வு செய்யப்படுகின்றது.

படம் 1:  2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல், மே மற்றும் ஜுன்) நியம மழைவீழ்ச்சி சுட்டி (SPI)

ஒவ்வொரு காலநிலை பிராந்தியங்களின் மூன்று மாத நியம மழைவீழ்ச்சி சுட்டியையும் (SPI)வரைபடம் 1 காட்டுகின்றது.

  • வடக்கில், டிசம்பர் 2003 முதல் பெப்ரவரி 2004 வரையிலும், டிசம்பர் 2013 முதல் பெப்ரவரி 2014 வரையிலும் தீவிர வறட்சி ஏற்பட்டுள்ளது.
  • கிழக்கில், 2002 ல் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலம், டிசம்பர் 2003 முதல் பெப்ரவரி 2004 வரை, பெப்ரவரி முதல் ஏப்ரல் 2014 வரையிலும் மற்றும் பெப்ரவரி முதல் ஏப்ரல் 2016 வரையிலும் தீவிர வறட்சி ஏற்பட்டுள்ளது.
  • தெற்கில், அக்டோபர் முதல் டிசம்பர் 2013 வரையிலும், பெப்ரவரி முதல் ஏப்ரல் 2014 வரையிலும் தீவிர வறட்சி ஏற்பட்டுள்ளது.
  • மேற்கில், டிசம்பர் 2003 முதல் பிப்ரவரி 2004 மற்றும் ஏப்ரல் முதல் ஜூன் 2004 வரையிலும் தீவிர வறட்சி ஏற்பட்டுள்ளது.

முழு நாட்டையும் கருத்தில் கொள்ளும்போது, டிசம்பர் 2003 முதல் பெப்ரவரி 2004 வரையிலான காலகட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், 2019 மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில்
கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.