வெப்பச் சுட்டி

வெப்பச் சுட்டி


இலங்கையின் அநேகமான மாவட்டங்களுக்கு 2020 இல் வெப்ப எச்சரிக்கை.

கடந்த சில மாதங்களாக இலங்கையின் அநேகமான பாகங்களில் கணிசமானளவு வறட்சியான காலநிலை காரணமாக பொதுமக்கள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாம் 2019 மற்றும் 2020 இன் முதல் நான்கு மாதங்களில் இலங்கையில் அதிக வறட்சியான காலநிலை பிரதேசங்களினை அடையானங் கண்டுள்ளோம். வெப்ப சுட்டியானது, சார்பளவிலான ஈரப்பதன் மற்றும் வெப்பநிலை என்பவற்றை பயன்படுத்தி கணிப்பிடப்படுகின்றது மேலும், இம்மதிப்பீடானது சரீரம் உணரும் சார்பளவிலான ஈரப்பதனின் அளவினை அடிப்படையாகக்கொண்டு மதிப்பிடப்படுகின்றது.

படம் 1 : இலங்கையின் மாதாந்த சராசரி வெப்ப சுட்டி 2019-2020

NOAA இனுடைய HI வகைப்பாடுகள் இலங்கையின் வெப்ப பரவலில்
இடரீதியான அதிக வேறுபாடுகள் எதனையும் காட்டவில்லை என்றாலும், தீவிற்கான HI பாங்கினை நோக்கும்போது மத்திய உயர்நிலங்களில் அமைந்துள்ள நுவரெலியா, தியத்தலாவை மற்றும் கண்டி முதலான பிரதான நிலையங்களில் கரையோரம் மற்றும் அண்சமவெளியிலும் விடவும் உயர்வாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. HI பெறுமதியானது, இடவமைப்பு மற்றும் மலைப்பாங்கமைப்புக்களில் நிலவும் பருவகால மழைவீழ்ச்சி மற்றும் சூழல் காலக்கழிவு வீதம் என்வற்றினடிப்படையிலும்
வேறுபடுகின்றது.

மாதாந்த HI பெறுமதியானது 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான உயர்வான மட்டத்தில் அதிகரிப்பதுடன், ஏனைய மாதங்களில் படிப்படியாக வீழ்ச்சியடைந்தும் செல்கின்றது. இதனையொத்த நிலைமையினை 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலும் அவதானிக்க முடிகின்றது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் மிகவும் அவதானமிக்க பகுதிகளாக வடக்கு, வட மத்திய மாகாணம் மற்றும் சில கரையோரப் பகுதிகளும் இணங்காணப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதில் நிலவும் அதிகரித்த வெப்பநிலையானது HI பெறுமதி அதிகரிப்புக்கான காரணமாகும். இக்காலப்பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தின் சில பகுதிகளில் HI பெறுமதியானது அதிகரித்து ஆபத்தான கட்டத்தையும், வடமத்திய, கிழக்கு, வடமேல மற்றும்; கரையோர பகுதிகளில் நிலைமை கடுமையான அபாயமிக்கதாகவும் அதிகரித்து ஆகஸ்ட் முதல் மெதுவாக வீழ்ச்சியடையவும் செய்கின்றது.

படம் 2 : 1986 – 2018 வரையிலான வெப்ப சுட்டி வேறுபாடுகள்

வெப்ப சுட்டி வேறுபாடுகளுக்கான படமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளுள்ள வகையிலான உயர்ந்த வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இதன்படி 2016 ஆம் ஆண்டு 2.7 எனும் உச்சத்தை அடைந்தும் உள்ளது.

படம் 3 : கடந்த சில தசாப்தங்களுக்கான மாதாந்த வெப்பசுட்டியின்
வேறுபாடுகள்

வருடாந்த வெப்பசுட்டி நிகழ்வு பாங்கினை விளங்கப்படுத்துவதற்காக நாம் வருடாந்த சராசரி ர்ஐ சுழற்சி பெறுமதியை பெற்றுள்ளோம். இந்த வருடாந்த சுழற்சியானது, 1986 – 2018 காலப்பகுதி;க்கான சராசரி மாதாந்த HI பெறுமதியை கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. வருடத்தின் முதல் 6 மாதங்களில் HI பெறுமதியில் மேல்நோக்கிய நகர்வினை காணமுடிவதுடன், ஏனைய மாதங்களில் குறைவடைவதையும் அவதானிக்கமுடிகின்றது. மேலும் HI பெறுமதியில் சிறிதளவான விலகலினை 2019 ஆகஸ்ட் மாதத்தில் இணங்காணமுடிகின்றது. 1986 – 2018 காலப்பகுதி;க்கான HI அட்டவணையின் படி, ஏப்ரல்- ஜுலை வரையிலான காலப்பகுதி அபாயமானதாகவும், கடுமையான எச்சரிக்கை கொண்டதாகவும் உள்ளதுடன் மிதமுள்ள வருடமானது, அதிகரித்த மற்றும் எச்சரிக்கiயுடைய காலப்பகுதியாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையின் அடிப்படையில், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் பகுதிகள் அதிகரித்த வெப்பநிலையுடன் எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் அதேவேளையில் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடுமையான எச்சரிக்கை நிலையிலும் ஏனைய மாதங்களில் காணப்படுகின்றது.