தளத்தைப் பற்றி

தளத்தைப் பற்றி


கண்ணோட்டம்

இப்பகுதியானது, வறட்சி தொடர்பான நடைமுறை விடயங்களை விளக்கவதற்காக கடந்தகால மற்றும் சமகால வறட்சி தொடர்பிலான நிலைகளை முன்வைக்கப்பதுடன், வறட்சியும் அதன் இடர்களும்  தொடர்பிலான  முன்னெச்சரிக்கையை வழங்குவதுடன், வள-உதவி முகாமைத்துவத்திற்கும், காலநிலை மாற்றங்கள் மற்றும் இடர் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களை தருவதாகவும் அமைந்துள்ளது. வறட்சி என்பது, நீர்-வானிலை சார்ந்த இடர்பாடுகளாகும். இதனால் வாராந்த காலநிலை தரவுகளை பயன்படுத்தி நாம் காலநிலை அவதானம், மற்றும் எதிர்வுகூறல்களையும் இப்பகுதியில் முன்வைத்துள்ளோம்.

பார்வையாளர்கள்

இத்தகவல்களானது, இடைநிலை பாடசாலை மாணவர்கள் முதல் மூன்றாம் நிலை கல்வி கற்போர் மற்றும் நீர் பற்றாக்குறையுள்ள சமூகத்தவர்கள்,  விவசாய, விரிவாக்கல் குழுக்கள், தனியார் நில உடமையாளர்கள், பொது சுகாதார நிருவனங்கள், நீர் வழங்குனர்கள் மற்றும் நீர்ப்பாசன முகாமையாளர்களையும் இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

வறட்சி, வெப்ப சுட்டிகள் என்பவற்றுடன் தொடர்புடைய பொருத்தமான மற்றும் வரலாற்று ரீதியான அளவீடுகள் தொடர்பிலான தகவல்களை புதுப்பித்தல்,

இடைநிலை பாடசாலை மாணவர்கள் முதல் மூன்றாம் நிலை கல்வி கற்போர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், நீர் பற்றாக்குறையுள்ள சமூகத்தவர்கள்,  , விவசாய விரிவாக்கல் குழுக்கள், தனியார் நில உடமையாளர்கள், பொது சுகாதார நிருவனங்கள், நீர் வழங்குனர்கள் மற்றும் நீர்ப்பாசன முகாமையாளர்கள் முதலான தெரிவுசெய்யப்பட்ட சமூகங்களுக்கு ஒரு கற்கை தளமாகவும் வளமாகவும் அமைதல்,

காலநிலை, அதன் மாற்றங்கள் மற்றும் வறட்சியின் மாற்றங்களின் வகிபாகங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குதல்,

தோற்றம்

எமது தகவல்கள் யாவும் விஞ்ஞான ரீதியிலான பரிசீலனைகளை அடிப்படையாக்க கொண்டு முன்வைக்கப்பட்டள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  விஞ்ஞான ரீதியிலான பரிசீலனைகளுக்குட்படுத்தப்பட்ட வெளியீடுகளின் துணை கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளது.