ஆலோசகர்கள்

ஆலோசகர்கள்


டாக்டர். பிராட்பீல்ட் லியோன்

பிராட்ஃபீல்ட் லியோன் MIT யில் இருந்து வானிலை அறிவியலில் PhD பெற்றார் மேலும் 1999 இல் ஐஆர்ஐ நிறுவனத்தில் சேர்ந்தார். அவரது ஆராய்ச்சி நடவடிக்கைகள் பருவகால மாறுபாட்டிற்கான காலநிலை மாறுபாடு பற்றிய அவதானிப்பு மற்றும் மாடலிங் கண்டறியும் ஆய்வுகளில் கவனம் செலுத்துகின்றன. காரண வழிமுறைகள், பிராந்திய வெளிப்பாடுகள், கணிப்பு மற்றும் வறட்சியின் தாக்கங்கள் குறித்து ஆராய அவர் குறிப்பாக ஆர்வமாக உள்ளார்

டாக்டர். நோயல் அலோசியஸ்

நோயல் அலோசியஸ் உயிரியல், உயிரியல் மற்றும் வேதியியல் பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ளார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் பின்வருமாறு: பிராந்திய அளவில் நீர்நிலைகளில் மாடலிங் செய்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹைட்ரோகிளிமாட்டாலஜி; நீர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீடு; இணைந்த மனித-இயற்கை அமைப்புகள்; சுற்றுச்சூழல் மாற்றம்; விவசாயத்தில் நிலம் மற்றும் நீர் மேலாண்மை மற்றும் இயற்கை வள மேலாண்மைக்கு தொலை உணர்வு

டாக்டர். ரன்மலி பண்டார

டாக். ரன்மலி பண்டார 2005 இல் சப்ரகமுவ பல்கலைகழகத்தில் நில அளவையியலில் விஞ்ஞான இளமாணி பட்டம் பெற்றுள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் விஞ்ஞானத்தில் முதுமாணி பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2014 இல் கட்டுமானப் பொறியியலில் PhD இளநிலைப்பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் எமது நிருவனத்தில் மழைநீர் அறுவடை மற்றும் சேமிப்பு தொடர்பிலான திட்டங்களில் ஆலோசனைகளை வழங்கிவருகின்றார்.

டாக்டர். விதுர ரலபனாவே – தகவல் தொழிநுட்ப ஆலோசகர்r. Vidhura Ralapanawe – IT Consultant

விதுர ரலபனாவே காலநிலை விஞ்ஞானம், தொடர்பாடல், நிருவன திட்டங்கள் முதலான விடயங்களில் சிறந்த அறிவாற்றல் உடையவராவார். இவர் மொறட்டவை பல்கலைகழகத்தில் ஆங்கில மொழியில் தமது விஞ்ஞாக இளமாணி பட்டத்தை பெற்றுள்ளதுடன், 1996 ஆம் ஆண்டில் பிரித்தானிய பாத் பல்கலைக்கழகத்தில் வியாபாரம் மற்றும் பொறுப்புடைமைகள் தொடர்பிலான தமது முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் 2000 ஆம் அண்டில் நிருவன மாற்றம் மற்றும் அபிவிருத்தி தொடரடபிலான PhD பட்டத்தினை பிரித்தானியாவின் ஆஸ்றிச் வணிக பாடசாலையி;லும் பெற்றுள்ளார். இவர் நிவ்யோர்க்கில் IBM நிருவனத்தில் ஆலோசகராகவும், பின்னர் இலங்கை கூட்டுநிருவன துறையில் சமூக, சுற்றுச்சூழல், இடர் முகாமைத்துவம் மற்றும் வணிகத் திட்டமிடல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் நிலைபேண் அபிவிருத்தி, தொழிநுட்பம் மற்றும் காலநிலை தகவல்களின் பிரயோகம் முதலான துறைகளில் மிகுந்த ஆர்வமுடையவராவார். எமது நிருவனத்தில் இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவற்றின் இடவமைவுகள் தொடர்பிலான விடயங்களை கையாள்கின்றார். இவர் தற்போது இலங்கை காவியக் குழுமத்தின் நிறைவேற்று அதிகாரமிகு பிரதி தலைவராகவும் பணியாற்றியும் வருகின்றார்.

.

பேராசிரியர். பியசேன விக்ரமகமகே – GIS, மண் மற்றும் நீர்வளவியல்

பேராசிரியர். விக்ரமகமகே பேராதனை பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற புவியியல் துறை பேராசிரியரும், அனர்த்த முகாமைத்துவ சேவையின் மூத்த ஆய்வு விஞ்ஞானியும் ஆவார். இவர் தமது இளங்கலை மாணிப்பட்டத்தினை புவியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகத்திலும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பௌதீக நிலவியல் தொடர்பிலான PhD பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் பிராதானமாக புவியியல் இடவமைவு முறை (GIS), மண், நீர்வளத்துறை, காலநிலை மற்றும் சூழல் தாக்க மதிப்பீடு முதலான பிரிவுகளில் பிரதானமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதுடன், அவற்றை வெளியிட்டும் உள்ளார். மேலும் இவர் மழைநீர் சேமிப்பு திட்டம், அபிவிருத்தி நடைமுறைகள் திட்ட முதுமாணி கற்கைகள், AgMP திட்டம், PEER திட்டத்தின் நீர் மற்றும் ஆபத்து திட்டம் (தேசிய விஞ்ஞான கழகம் -USAID) முதலான பல திட்டங்களிலும், அமைப்புக்களிலும் இணைப்பாளாராகவும், கூட்டு செயற்பாட்டாளராகவும், முதன்மை விசாரனையாளராகவும் இருந்துள்ளார்.

டாக்டர் லரீப் சுபைர் – மூத்த விஞ்ஞானி ஃ காலநிலை மாற்றம் தொடர்பிலான விஞ்ஞானி மற்றும் தொழிநுட்பவியலாளர்

டாக்டர் லரீப் சுபைர் கடந்த இரு தசாப்தங்களாக காலநிலை, சுற்றாடல், வெப்ப மண்டல மாற்றம் மற்றும் தொழிநுட்ப முன்னேற்றம் முதலான துறைகளில் பணியாற்றி வருகின்றார்.
இவர் காலநிலை முறைகள், காலநிலை தழுவல்ஃ மாற்ற அணுகுமுறைமைகள் மற்றும் வெப்பமண்டலத்தில் இவை
தொடர்பிலான பிரயோக தீர்வுகளை உருவாக்குதல் முதலானவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவர் கொள்கை தீர்மானிப்பாளர்கள், பிற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியிலாளர்கள் என்போருடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருகின்றார். முன்னதாக இவர் யாலே பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் பொறியியலிலும்,
வளிமண்டளவியல் விஞ்ஞான கூட்டு பல்கலைகழகத்தில் காலநிலை அவதானிப்பு மற்றும் பிரயோகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் இலங்கை பேரதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிரேஸ்ட விரிவுரையாளராகவும், இலங்கை அடிப்படை கற்கைகளுக்கான நிருவகத்தில் சக ஆய்வாளராகவும் இருந்துள்ளார். மேலும் சர்வதேச ஆய்வு நிருவனத்தில் (IRI) காலநிலை மற்றும் சமூக ஆய்வுகளுக்கான விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளதுடன் கொலம்பிய பல்கலைக்கழக நீர் மத்திய நிலையத்திலும் இணைந்திருந்தார். டாக்டர் லரீப் சுபைர் அவர்கள் தமது இளமாணிப் பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் படிப்பை ஐக்கிய அமெரிக்க யாலே (Yale) பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளார்.