வறட்சியின் வகைகள்

வறட்சியின் வகைகள்


1980 களின் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் வறட்சி குறித்த 150 க்கும் மேற்பட்ட வரைவிலக்கணங்களை கருத்திற் கொள்ளவில்லை. இவ் வரைவிலக்கணங்கள் இடரீதியான வேறுபாடுகள், தேவைகள் மற்றும் ஒழுங்கு அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுகளையும் பிரதிபலிக்கின்றன. Wilhite and Glantz ஆகியோர் வறட்சியை அளவிடுவதற்காக வானிலை, நீரியல், விவசாயம் மற்றும் சமூக பொருளாதாரம் எனும் நான்கு அடிப்படை அணுகுமுறைகளின் கீழ் வறட்சியை வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். இவற்றுள் முதல் மூன்று அணுகுமுறைகள் வறட்சியை இயற்பியல் சார்ந்த கருத்தக்களால் அணுகியுள்ளன. இறுதி அணுகுமுறையானது கேள்வி மற்றும் நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் வறட்சியைக் கையாள்கிறது, இம்முறையானத நீர் பற்றாக்குறையின் விளைவுகளை சமூக பொருளாதார அமைப்புகள் கொண்டு விளக்கமுனைகின்றது.

1. வளிமண்டலவியல் வறட்சி

பொதுவாக வறட்சி ஏற்படுவதற்கான நிகழ்வுகள் மற்றும் தாக்கங்கள் என்பன வறட்சி வகைகளாக தாக்கங்கள் என்பன வறட்சியின் வகைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வறட்சிகள் யாவும் மழைப்பொழிவில் எற்படம் பற்றாக்குறை அல்லது வானிலை வறட்சியின் காரணமாக உருவாகின்றன (Source: National Drought Mitigation Center, University of Nebraska-Lincoln, U.S.A).

வளிமண்டலவியல் வறட்சியானது வறட்சியின் அளவினாலும், வறட்சி நிலவும் காலப்பகுதிக்கேற்பவும் விளக்கப்படுகின்றது. மேலும் இவ்வரைவிலக்கணமானது, பிராந்திய அடிப்படையிலான வளிமண்டல நிலைமைகளினை கருத்திற்கொள்வதாகவும் உள்ளது. காரணம் மழைவீழ்ச்சி பரம்பலானது பிரதேசத்திற்கு பிரதேசம் உயர்ந்தளவில் வேறுபடுவதனாலாகும். எடுத்துக்காட்டாக, சில வரைவிலக்கணங்கள் வறட்சியின் காலங்களை சில குறிப்பிட்ட வரம்பை விட குறைவான மழைப்பொழிவு கொண்ட நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றன. இந்த நடவடிக்கையானது வருட மழைப்பொழிவு அடி;ப்படையில் வகைப்படுத்தப்படும் வெப்பமண்டல மழைக்காடுகள், ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலை அல்லது ஈரப்பதமான நடு அட்சரேகை காலநிலை போன்ற பகுதிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக அமையும். எடுத்துக்காட்டாக . மனாஸ் (Manaus), பிரேசில் (Brazil), நியூ ஆர்லியன்ஸ் (New Orleans), லூசியானா (Louisiana (U.S.A.)) மற்றும் லண்டன் – இங்கிலாந்து (London, England) முதலான இடங்களினை குறிப்பிடலாம். மத்திய அமெரிக்கா, வடகிழக்கு பிரேசில், மேற்கு ஆபிரிக்கா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா போன்றன பருவகால மழை வீழ்ச்சி பாங்கின் அடிப்படையில் காலநிலை பிராந்தியங்களினை வகைப்படுத்துகின்றன. ஒமாஹா(Omaha), நெப்ராஸ்காவில் (Nebraska- U.S.A.), போர்டாலெஸா (Fortaleza), சியர் – பிரேசில் (Ceará -Brazil), டார்வின் (Darwin) மற்றும் வடமேற்கு – ஆஸ்திரேலியா (Northwest Territory -Australia) முதலான பிராந்தியங்கள பொதுவாக மழை இல்லாத நீண்ட காலங்களினை கொண்டுள்ளன. இவை சில குறிப்பிட்ட எல்லையை விட குறைவான மழைப்பொழிவு கொண்ட நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட வறட்சியை வரையறை செய்கின்றபோதும் இவை நம்பகத்தன்மை குறைந்ததாகவும் உள்ளன. எனினும் பிற வரையறைகள் மாதாந்த, பருவகால அல்லது வருடாந்த உண்மையான மழைவீழ்ச்சி அளவீடுகளில் சராசரி அளவுகளுடனும் தொடர்புபட்டுள்ளன.

2. விவசாய வறட்சி

விவசாய வறட்சியானது மழைப்பொழிவு பற்றாக்குறை, உண்மையான மற்றும் சாத்தியமான ஆவியாதல் தூண்டுதல், மண் நீர் பற்றாக்குறை, குறைக்கப்பட்ட நிலத்தடி நீர் அல்லது நீர்த்தேக்க அளவுகள் குறைவடைதல் மற்றும் வறட்சியின் பல்வேறு பண்புகளை விவசாயத்துடன் இணைக்கிறது, விவசாயத்திற்கு தேவையான நீரிற்கான கேள்வியானது, நிலவும் வானிலை, குறிப்பிட்ட தாவரத்தின் உயிரியல் பண்புகள், அதன் வளர்ச்சியின் நிலை மற்றும் மண்ணின் தண்மை; மற்றும் உயிரியல் பண்புகள் ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றது.

விவசாய வறட்சிற்கான சிறந்த வரைவிலக்கணமானது, பயிர் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில், தோற்றம் முதல் முதிர்ச்சி வரை பயிர்களின் மாறுபட்ட பாதிப்புக்களையும் கருத்திற் கொள்வதாக அமையும்.

பயிர் செய்கை பண்ணப்படும்; போது குறைந்த மண் ஈரப்பதம் முளைப்பதைத் தடுப்பதுடன் மட்டுமின்றி இறுதி விளைச்சளையும் குறைவடையச்செய்வதுவிடுகின்றது. இருப்பினும் ஆரம்ப வளர்ச்சியில் தேவைகளுக்கு மேல் மண் ஈரப்பதம் போதுமானதாக இருந்தால், பயிர்கள் வளரும்;; போது மழையினால் மண்மேற்பரப்பில் ஈரப்பதம் நிரப்பப்பட்டால் அல்லது மழை தாவர நீர் தேவைகளை பூர்த்திசெய்தால் இந்த ஆரம்ப கட்டத்தில் மண்ணின் ஈரப்பதத்தின் குறைபாடுகள் இறுதி விளைச்சலை பாதிக்காது.

3. நீரியல் வறட்சி

நீரியல் வறட்சியானது நீர்மேற்பரப்பு அல்லது துணைநீர் மேற்பரப்புக்களில் அதாவது, நீரோடை நீர்த்தேக்கம் மற்றும் ஏரி நிலைகள் நிலத்தடி நீர் பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின் (பனிப்பொழிவு உட்பட) விளைவுகளுடன் தொடர்புடையது. நீர்நிலை வறட்சியின் தோற்றங்கள் மற்றும் தீவிரம் பெரும்பாலும் வடிநிலங்கள் அல்லது நதி படுக்கைகளின் அளவினை கொண்டு வரையறுக்கப்படுகிறது. அனைத்து வகையான வறட்சிகளும் மழைவீழ்ச்சியின் குறைபாட்டினால் தோன்றினாலும் நீரியியலாய்வு வல்லுநர்கள் இந்த குறைபாடு எவ்வாறு நீர்நிலை அமைப்பில் தாக்கம் செலுத்தகின்றது என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

நீரியல் வறட்சிகள் பொதுவாக வானிலை மற்றும் விவசாய வறட்சிகளின் முந்தைய நிலைமையாகவுள்ளது. இவை பொதுவாக நீண்டகாலத்தில் மண்ணின் ஈரப்பதம் நீரோடை மற்றும் நிலத்தடி நீர் மற்றும் நீர்த்தேக்க அளவுகள் போன்ற நீர்நிலை அமைப்பின் கூறுகளில் மழைப்பொழிவில் ஏற்படும்வதனால் ஏற்படுகின்றது. இதன் விளைவாக ஏனைய பொருளாதாரத் துறைகளிலும் தாக்கங்கள் ஏற்படவும் செய்கின்றது. எடுத்துக்காட்டாக மழைவீழ்ச்சி குறைபாடு விவசாயிகளுக்கு உடனடியாக உணரக்கூடிய வகையில் மண்ணின் ஈரப்பதத்தை விரைவாகக் குறைக்கக்கூடும், ஆனால் நீர்த்தேக்க அளவுகளில் மழைவீழ்ச்சி குறைபாட்டின் தாக்கம் பல மாதங்களுக்கு நீர் மின் உற்பத்தி அல்லது சுற்றுலாதுறையை பாதிக்காது என்றபோதும் நீண்டகாலத்தில் இதன் தாக்கங்களை உணரவும் முடிகின்றது. மேலும் நீர் சேமிப்பு (நீர்த்தேக்கங்கள் ஆறுகள்) பெரும்பாலும் வெள்ளக் கட்டுப்பாடு நீர்ப்பாசனம் பொழுதுபோக்கு வழிகாட்டல்கள் நீர் மின்சாரம் வனவிலங்கு வாழ்விடங்கள் முதலான போட்டி மிகுந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக வறட்சியின் போதும் நீர் பயன்படுத்துபவர்களின் அதிகரிப்பும் சிக்கல்நிலைகளை கணிசமாக அதிகரிக்கின்றன.

4. சமூக பொருளாதார வறட்சி

வறட்சியின் சமூக பொருளாதார வரைவிலக்கணங்கள் வானிலை, நீர்நிலை மற்றும் விவசாயம் முதலானவற்றுடன் தொடர்புடைய அடிப்படை பொருட்களுக்கான கேள்வி மற்றும் நிரம்பலுடனும் தொடர்புடையதாகும். இது மேற்கூறிய வகை வறட்சிகளிலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இங்கு வறட்சியை அடையாளம் காண அல்லது வகைப்படுத்துவதற்கு நேரம் மற்றும் விண்வெளி செயல்முறைகள் அடிப்படையிஜலான கேள்வி மற்றும் வழங்கலினை சார்ந்தள்ளது. நீர், தீவனம், உணவு தானியங்கள், மீன் மற்றும் நீர்மின்சக்தி போன்ற பல பொருளாதார பொருட்களின் வழங்கல் பெரும்பாலும் வானிலையை சார்ந்துள்ளது. காலநிலையின் இயற்கையான மாறுபாடடின் காரணமாக நீர் வழங்கல சில ஆண்டுகள் வலை சாத்தியமானதெனினும்; மற்ற ஆண்டுகளில் மனித மற்றும் சுற்றுச்சூழல் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போகலாம். மோசமான வானிலை காரணமாக நீர் வழங்கலில் ஏற்படும் பற்றாக்குறையின் விளைவாக பொருளாதார பொருட்களுக்கான தேவையானது அதன் வழங்களை விஞ்சும்போது சமூக பொருளாதார வறட்சி ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1988-89 ல் உருகுவேயில், வறட்சி நீர்மின்சார உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்தது, ஏனெனில் மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்திக்கான சேமிப்பைக் காட்டிலும் நீரோடை ஆறுகள் என்பவற்றின் மீதே தங்கியிருந்தன. நீர்மின்சார உற்பத்தியில் ஏற்படும் குறைவின் மூலம் அரசாங்கம் அதிக செலவீனங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படலாம். ஏனெனில் நாட்டின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம்) பெட்ரோலியம், எரிசக்தி முதலான வியையுயர்வான சக்திவளங்களை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. பொதுவாக மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் தனிநபர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக பொருளாதார பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. முhறாக நிரம்பலானது, உற்பத்தி திறன், தொழில்நுட்பம் அல்லது மேற்பரப்பு நீர்த்தேக்கங்களின் நீர் சேமிப்பு திறன் அதிகரிப்பு அதிகரிக்கும்;; அதிகரிக்கக்கூடும். வழங்கல் மற்றும் தேவை இரண்டும் அதிகரிக்கம்போது சர்பளவிலான மாற்றவீதம் முக்கிய காரணியாக வருகின்றது. வழங்கலை விட தேவை வேகமாக அதிகரிக்கும்போது வழங்கல் மற்றும் தேவையின் போக்குகள் ஒன்றிணைவதால் எதிர்காலத்தில் வறட்சி மற்றும் அதன் பாதிப்பும்; அதிகரிக்கும். Wilhite, D.A.; and M.H. Glantz. 1985. Understanding the Drought Phenomenon: The Role of Definitions. Water International 10(3):111–120.

5.சுற்றுச்சூழல் வறட்சி

மிகச் சமீபத்திய ஆய்வுகள் சுற்றுச்சூழல் வறட்சியை இயற்கையாகவே கிடைக்கக்கூடிய நீர் விநியோகத்தில் நீடித்த மற்றும் பரவலான பற்றாக்குறையையும் – இயற்கை மற்றும் நிர்வகிக்கப்பட்ட நீர்வளவியல் குறைபாடுகள் என்பவற்றை கொண்டுள்ளதாக முன்வைகட்கின்றது மேலும் இந்நிலையானது சுற்றுச்சூழல் அமைப்புகளில் பல அழுத்தங்களை உருவாக்குகிறது. தேசிய வறட்சி தணிப்பு மத்திய நிலையத்திலிருந்து (The National Drought Mitigation Center)