விவசாயம்

விவசாயம்


வறண்ட காலநிலையின் தாக்கங்கள் நெல், தேயிலை, இறப்பர் மற்றும் தேங்காய் போன்ற பிற பயிர்களின் உற்பத்தியிலும் வானிலையின் காணப்படுகின்றது.

  • அரிசி உற்பத்தி

இலங்கையர்களின் உணவின் முக்கிய அங்கமாக அரிசி திகழ்வதுடன் பல விவசாயிகளின் வாழ்வாதாரமாகம் உள்ளது. எனினும் காலநிலை காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக அரிசி அல்லது நெல் உற்பத்தியில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுவருகின்றது. பின்வரும் வரைபடத்தில், சிறுருபோகம் (யலா) மற்றும் பெரும்போகம் (மஹா) பருவங்களுக்கான மொத்த உற்பத்தி மற்றும் ஒரு ஹெக்டேருக்கு எவ்வாறு குறைந்து வருகிறது என்பதைக் காணலாம்.

இந்நிலையானது விலையுயர்விற்கும் மற்றும் இறக்குமதி அதிகரிப்பு போக்குக்கு வழிவகுப்பதுடன் இது நாட்டின் பொரளாதார நிலையிலும் பாரிய எதிரொலியை ஏற்படுத்தி வருகின்றது. பொருளாதாரத்தின் நிலைக்குஇறுதி விளைவையும் தருகிறது. விளக்கப்படம் 12 மழையின் செல்வாக்கையும் அதன் மூலம் நெல் உற்பத்தி மற்றும் விளைச்சளில் வறட்சியின் தாக்கத்தினையும் விளக்குகிறது.

மேலுள்ள விளக்கப்படமானது பெரும்போகம் விசவாய உற்பத்தியில் முதன்மை பெற்றுள்ளதை காட்டிநிற்கின்றது. கடந்த 4 தசாப்தங்களில் இலங்கை ஆண்டு சராசரி உற்பத்தியாக பெரும்போகத்தில் 1900, 000 மெட்றிக் தொன்களையும், சிறுபோகத்தில் 1106, 000 மெட்றிக் தொன்களையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிட்தக்கது. மேலும் வரைபடத்தின்படி 2018-2019 பெரும்போகத்தில் 3072, 000 மெட்றிக் தொன்களும், 2015 சிறுபோகத்தில் 1942, 000 மெட்றிக் தொன்களும் உயர்ந்தளவான உற்பத்தியாக பதிவாகியுள்ளன.

இலங்கையின் அனுபவத்தின்படி, நெல் உற்பத்திக்கும் காலநிலைக்குமிடையே பொருளுள்ள தொடர்பு காணப்படுகின்றது எனலாம். மறுவாறாக நெல் உற்பத்தியானது காலநிலை மாறிகளான மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலையுடன் உயர்ந்தளவிலான உணர்திறனை நீண்டகாலத்தில் கொண்டுள்ளன எனலாம். ஊதாரணமாக 2014-2015 பெரும்போகம் மற்றும் 2015-2016 பெரும்போகத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி கிடைப்பனவுடன் நெல் உற்பத்தியானது முறையே 15 சதவீதத்தினாலும் மற்றும் 16 சதவீதத்தினாலும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. வருடாந்த சராசரி நெல் விளைச்சலும் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி முதலான காலநிலை மாறிகளுடன் குறுங்கால மற்றும் நீண்டகால தொடர்பை கொண்டுள்ளமையையும் காணலாம்.

2004 தொடக்கம் 2017 வரையிலான பெரும்போக மற்றும் சிறுபோகத்திற்கான மொத்த நெல் உற்பத்தி யில் ஹெக்டேயருக்கான நெல் விளைச்சள்.
  • தேயிலை உற்பத்தி

தேயிலை பல ஆண்டுகளாக அந்நிய செலாவணி மூலத்தின் முக்கிய ஆதாரமாக இருப்பதுடன்; ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்துவருகின்றது. தேயிலை உற்பத்தியானது காலநிலையுடன் மிகவும் உணர்திறன் உடைய அதே நேரத்தில் சுவை மற்றும் வாசனையின் தனித்துவமான கலவையை ஊக்குவிக்கிறது. எனினும் எமது நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியானது 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒரு நிலையான வீழ்ச்சியைக் கொண்டுள்ளதுடன் 2009 அம் ஆண்டில் குறைவான உற்பத்தியையும் பதிவுசெய்தது. இதனை விளக்கப்படம் 13 விளக்கிநிற்கின்றது.

படம் 13 – 1998-2016 ஆண்டு முதல் மொத்த இலங்கை தேயிலை உற்பத்தி

விளக்கப்படம் 14, தேயிலை அறுவடை செய்யப்படும் மூன்று முக்கிய புவியியல் இடங்களில் உற்பத்தியின் அளவினை அதிக வளர்ச்சியடைந்த, நடுத்தர வளர்ந்த மற்றும் குறைந்த வளர்ந்த பகுதிகள் அடிப்படையில் விளக்கி நிற்கின்றது. உயர் மற்றும் குறைந்த வளர்ந்த பகுதிகள் இரண்டும் தட்பவெப்பநிலையினால்; குறிப்பாக ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனதுடன் இக்காலப்பகுதியில் வறட்சி நிலை நீடித்ததும் வருகின்றது.

படம் 14: தேயிலை உற்பத்தி உயர், நடுத்தர மற்றும் குறைந்து வளர்ந்த பகுதிகள்
  • இறப்பர் உற்பத்தி

இலங்கை பொருளாதாரத்தில் இறப்பர் மூன்றாவது ஏற்றுமதி வருமானமம் ஈட்டித்தரும் துறையாக உள்ளதுடன்; மோசமான வானிலை காரணமாக அறுவடைக்கு பாதிப்படையும் ஒரு பெருந்தோட்ட செய்கையாகவும் உள்ளது. அதிக வெப்பநிலை இறப்பர் மரப்பால் உற்பத்தியை பாதிப்பதுடன், இறப்பரின் விளைச்சலிலும் தாக்கம் ஏற்படுகின்றது. விளக்கப்படம் 15 இல், ரப்பர் உற்பத்தியானது கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு உற்பத்தியினை பதிவு செய்துள்ளமையை காணலாம். கடந்த காலங்களில் இறப்பர் உற்பத்தியானது மோசமான காலநிலையின் காரணமாக படிப்படியாக வீழ்ச்சியடைந்துசெல்வதனை காணலாம்.

படம் 15: 1998 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் இறப்பர் உற்பத்தி
  • தெங்கு உற்பத்தி

தெங்கு உற்பத்தியின் அடிப்படையில் புத்தளம், கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமானது தெங்கு உற்பத்தியில் முக்கோண வலயங்களாக அறியப்படுகின்றது. இலங்கையின் மொத்த தெங்க உற்பத்தியில் இப்பிரதேசமானது பெரும் விளைச்சலைக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலவும் வறட்சியுடனான காலநிலைமை காரணமாக விளைச்சளானது 20% குறைந்து வருவதாகவும், இதன் விளைவாக ஏற்றுமதி மற்றும் தொழில்துறை பயன்பாட்டைக் காட்டிலும் நுகர்வுக்கான தெங்கு உற்பத்தியில் குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. விளக்கப்படம் 16 தெங்கு உற்பத்தியின் போக்கினை விளக்குகின்றது.

படம் 16: 1998 முதல் 2016 வரை மொத்த தேங்காய் உற்பத்தி

இலங்கையின் தெங்கு உற்பத்தியின் முக்கிய பகுதிகளின் மாதாந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, விளைச்சளின் வீதமானது எதிர்க்கணியமாக இருப்பதுடன் 2017ஆம் ஆண்டில் 2016 இன் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது கடைசி இரண்டு மாதங்களுக்கான உற்பத்தி வீதாசாரமானது எதிர்மறையாக இருப்பதைக் காணலாம். இதளை விளக்கப்படம் 17 இல் தெளிவாக விளக்கிநிற்கின்றது.

.

படம் 17 – பிரதான தெங்கு விளையும் பகுதிகளுக்கான 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட மாதாந்த தெங்கு விளைச்சலின் மாற்றங்கள். பிரதான தெங்கு விளையும் பகுதிகள் – தெங்கு வளர்ச்சிக்கு சாதகமான S2 வகையான – உகந்த மண்வளம் மற்றும் S4 வகையான – எல்லை மண்வளம் என்பவற்றை கொண்ட குருணாகலை மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் உள்ளிடக்கிய பிரதேசம்.

படம் 18 இல் காட்டப்பட்டுள்ளபடி, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு தெங்கு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மேற்கண்ட மாற்றங்களை இரு மாத கணிப்பு அடிப்படையில் குறைவடைவதனையும் காணலாம்.

படம் 18 – ஜனவரி – டிசம்பர் 2017 க்கான இரு மாத முன்னறிவிப்பை 2016 இல் மதிப்பிடப்பட்ட தேசிய தேங்காய் உற்பத்தியுடன் ஒப்பிடுதல், ANCP: ஆண்டு தேசிய தேங்காய் உற்பத்தி