இலங்கை
இந்த ஆய்வு இயற்கை அனர்த்தங்கள், அனர்த்தங்களின் பாதிப்பு மற்றும் அனர்த்த அபாயம் என்பவற்றினை தெளிவாக மதிப்பீடு செய்கின்றது. இலங்கையின் அரசாங்க நிருவனங்களின் தரவுகளை பயன்படுத்தி வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் மண்சரிவு அவற்றின் பாதகத்தண்மைகள் அடையாளங்காணப்பட்டுள்ளது. வறட்சி மற்றும் வெள்ள அனர்த்தமுள்ள பகுதிகள் 10 கிலோமீட்டர் தூர அடிப்படையில் பெறப்பட்ட மழைவீழ்ச்சி தரவுகளின் மூலம் வரைபடமாக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி மற்றும் மண்சரிவு தொடர்பிலான வரைபடங்கள் நீண்டகால வரலாற்று நிகழ்வுகளினை அடிப்படையாக கொண்டும் அமைந்தள்ளன. பிராந்திய கைத்தொழில் அபிவிருத்தி;, உட்கட்டமான அபிவிருத்தி, மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றுடன் தொடர்புடைய குறிகாட்டிகள் பதிலீட்டு மாறிகளை அடிப்படையாக கொண்டம் மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்திய உணவு பாதுகாப்பின்மை தொடர்பிலான ஆய்விற்காக உலக உணவ திட்டத்தின் தகவல்களையும் இந்த ஆய்வு பயன்படுத்தியுள்ளது. இடர் அனர்த்தம் தொடர்பிலான அவசர நிவாரண பதிவுகளுக்காக இடம்சார் பதிலீடுகள் சிலவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்த விளக்கபடங்கள் மற்றும் அனர்த்த ஆபத்துமிகுந்த முக்கிய இடங்களினை வழங்குவதற்காக வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் மண்சரிவு என்பனவற்றின் அபாயமானது அதனுடன் தொடர்புடைய பொரளாதார இழப்புக்களுடன் தொடர்புடைய பதிலீட்டு மாறிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் பிரதான கண்டபிடுப்புக்கள் பின்வருமாரு,
- நாட்டின் தரவு கிடைப்பனவினை பொருத்து பயனுள்ள ஆபத்து மற்றும் பாதிப்பு தொடர்பிலான ஆய்வினை மேற்கொள்ள முடியும். மேலும் வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் மண்சரிவு தொடர்பிலான ஆபத்து மற்றும் பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க அளவிலான இடவேறுபாட்டை காட்டி நிற்கின்றன. இதனால் ஆய்வின் நிவாரணம், காலநிலை மற்றும்பிற அம்சங்கள் தொடர்பிலான தீர்மானங்கள் இடவேறுபாட்டுடன் இணைந்ததாக அமைதல் வேண்டும். உள்ளூர் மட்ட திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு இடர் தொடர்பிலான ஆய்வுகள் உயர்மட்ட இடம்சார் உலகியல் தீர்மானங்கள் அவசியமாகின்றது
- தென்மேற்கு பகுதியில் கேகாலை மற்றும் இரத்தினபுரி, வடகிழக்கில் அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மற்றம் மத்மதிய மலைநாட்டில் சரிவுகளிலுள்ள நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை முதலான மாவட்டங்கள் மிகவும் ஆபத்து மிகந்த பகுதிகளாக இடர் பகுப்பாய்வானது கண்டறிந்துள்ளது.
- வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் மண்சரிவு என்பனவற்றிற்கிடையில் தெளிவான பருவநிலை வேறுபாடுகள் காணப்படுகின்றது. அதேசமயம் கிழக்குப் பகுதிகள் போரியல் வீழ்ச்சி (boreal fall) மற்றும் குளிர்காலத்தின் ஆரம்பத்தில் வெப்பமான நிலைமைகளை கொண்டுள்ளன, மேற்கு-சரிவு பகுதிகள் கோடை மற்றும் இலையுதிர் காலத்தின் முன்னரும் ஆபத்து மிகுந்த பகுதிகளாக உள்ளன. எனவேதான் நாம் வெப்ப இடவமைவை மட்டுமின்றி வெப்ப பருவங்கள் இனையும் கருத்தில் கொள்ளவேண்டும்
- வறட்சி, வெள்ளம் சூறாவளிகள் மற்றும்; நிலச்சரிவு ஆகியவற்றின் அபாயத்தின் அளவை மதிப்பிடுவதற்கு காலநிலை தரவு பயனுள்ளதாக அமைகின்றது. வெள்ளம் மற்றும் வறட்சி பற்றிய அபாய பகுப்பாய்விற்கு இங்கு பயன்படுத்தப்படும் ஆய்வுமுறைகள் காலநிலைக்கும் ஆபத்துக்கும் இடையிலான வெளிப்படையான தொடர்பை முன்வைக்கின்றன. இந்த ஆய்வுமுறைகள் எதிர்காலத்தில் எதிர்வுகூறல்ஃமுன்கணிப்பு மற்றும் அபாய ஆபத்து மதிப்பீடுகளை வழங்க பருவகால காலநிலை கணிப்புடன் இணைந்து பயன்படுத்தப்படலாம்.
- காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் காடழிப்பு, நகரமயமாக்கல் மற்றும் போர் போன்ற சமூக மாற்றங்கள் என்பன அபாய வெளிப்பாடு மற்றும் அவற்றின் பாலதிப்புக்கழள அதிகரிக்கவும் செய்கின்றன. இத்தகைய மாற்றங்களை அளவிடுவது மிகவும் கடினம். இருப்பினும், காலநிலை மாற்றம் ஏற்கனவே இலங்கைத்தீவின் சில பகுதிகளை வறட்சி அபாயத்திற்கு உள்ளாக்குகியுள்ளது.
Reference : Natural Disaster Hotspots Case Studies
விவசாயம்
இலங்கை பாரம்பரிய விவசாய நாடாக இருந்து வருவதுடன் மேலும் குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்வாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றிற்காக விவசாய துறையிலேயே இன்றும் தங்கியிருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் விவசாயத்திலிருந்து நேரடியாக பயனடைந்த வருவதுடன் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பல மில்லியன் விவசாய பொருட்களுக்கான தேவையை எமது நாடு வழங்கி வருகின்றது. சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் அனுபவித்தின்படி ஒருபுறம் வெள்ளம் மற்றும் மறுபுறம் வறட்சி ஆகியவை விவசாய நிலங்களையும,; தாவரங்களையும், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளினையும் வெகுவாக பாதித்து வருகின்றது. விவசாயிகளிடையே உளவியல் மன அழுத்தம், தற்கொலைகள் என்பன அதிகர்த்து வருவதுடன் அதிகமான இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விவசாய கைவினை மற்றும் வாழ்வாதாரங்களை கைவிடும் போக்குகளும் உள்ளன இவை சமூகத்திற்கு துயரத்தையும் தருகின்றன. இது போன்ற இயற்கை பேரழிவுகளின் விளைவுகளைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் அரசாங்க நிவாரண சேவைகளுக்கான செலவினங்களிலும் இது பாதகத்தன்மையினை ஏற்படுத்தவும் செய்கின்றது. இந்நிலையானது உணவு இறக்குமதிக்கான நாட்டின் நிதி ஒதுக்கு குறித்த ஆழமான உள்தள்ளலை உருவாக்குகிறது. இலங்கை ஏற்கனவே தொழில்நுட்பம் மற்றும் வணிக முயற்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய கடன் சுமையை கொண்டுள்ளது மேலும் விவசாயத்திலும் நாடு கடனுக்கு பங்களிக்கும் போது தேசிய படுகடன் நிலைமையானது தீவிரமடைகின்றது. அரசியல் ரீதியான எதிரொளிகளையும் ஏற்படுத்தி இதன் தீவிரத்தண்மையினை தணிக்கம் பொரட்டு ஒரு சில நாடுகளின் தயாரிப்புகளுக்கு சாதகமாக செயற்படவும் செய்கின்றன. இந்நகர்வானது ஒரு நாடானது பாரம்பரிய விவசாயத் தொழில்களுக்கு திரும்பிச் சென்று பாரம்பரிய காலனித்துவ பொருளாதார முறைமையில் போன்று மலிவான விலையில் பொருட்களையும் பதிலீடு செயயவும் நிலையினை ஏற்படுத்தும்.
சுகாதாரம்
வறட்சி என்பது ஒரு நிலையான காலப்பகுதியில் சராசரி மழைவீழ்ச்சி இல்லாமையை குறிக்ப்பதாக வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலும் வறட்சி கடும் வெப்பநிலையுடன் தொடர்புடையது – இது அதிக ஆவியாதலுக்கு வழிவகுப்பதுடன், மனித உயிர்வாழ்வதற்கு நீர் அவசியமான பயன்பாடு மற்றும் நுகர்வுக்கான நீர் இழப்புக்கும் வழிவகுக்கிறது. மனித வரலாறுகள் முழுவதும் மனிதர்கள் நீர் உபரிகளுக்கு அருகில் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளனர், இந்நீர்சிலைகள் அழிவடையும்போது பாலைவனமாக்கல் முதலான அச்சுறுத்தல்கள் சமூக உயிர்களுக்கு; பிரச்சினைகளாகவும் வந்துள்ளன. வறட்சி நேரடியாக குடிநீர் கிடைப்பதையும் அணுகுவதையும் பாதிக்கிறது. குடிநீர் என்பது மனிதர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைப்பாடாவதுடன் மனித ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. போதிய நீர்கிடைப்பனவின்மையானது, அதிகப்படியான தாகம், நீரிழப்புஃஉடல்வறட்சி, சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் உடல் அமைப்புக்களின் தோல்வி ஆகியவற்றுக்கு காரணமாக அமைகின்றது.
வறட்சி நிலைகள் நீடிக்கும் போது நீர் மாசுபடுவதற்கான அச்சுறுத்தலும் உள்ளது, இது பல உடல்நலக் கேடுகளுக்கும் வழிவகுக்கும். வறட்சி தொடங்கி நீர் வளங்கல் குறைந்து வருவதால், நிவாரண முயற்சிகளுக்கும் நீண்டகால அமுலாக்கத்திட்டங்களுக்கு எதிராகவும் பாதிப்பக்கள் உள்ளது. சமைப்பதில் நீர் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளதுடன்; முறையற்ற சலவை மற்றும் சுத்தம் காரணமாக சுகாதார சிக்கல்களை ஏற்படுத்;தவும் செய்கின்றது. பொதுவாக மலைகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீரைப் பெறுவதற்கான நீர் ஆதாரங்கள் வறண்டு போதல் நீர் விநியோகத் திட்;டத்தில் உள்ள குறைபாடு மற்றும் நீர் பற்றாக்குறை என்பன குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மலேரியா டெங்கு காசநோய் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்களைப் பரப்புவதில் காலநிலை நேரடியான பங்கைக் கொண்டுள்ளது (நீர் சுழற்சியில் அதன் செல்வாக்கு உட்பட). சமீப காலங்களில், டெங்கின் நோயின் அதிகரிப்பானது வறட்சி நிலைமைகள் மற்றும் நீடித்த வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றுடன் தொடர்புபட்டுள்ளது.
இன்று CDK சிறுநீரக நோய்க்குப் பின்னால் உள்ள வழிமுறைகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இருப்பினும், குறிப்பாக ஆண் விவசாயிகள் தீவிர வெப்பநிலைகளுக்கு முகங்கொடுப்பதுடன் உடல் நீரிழப்புக்கும் ஆளாகின்றனர்.
இதனால் வறட்சியானது ஏற்கனவே அதிக சுமை கொண்ட சுகாதார சேவைகள் மற்றும் மக்கள் மீது மேலும் கேள்விகளை அதிகரிக்கச்செய்கின்றது. குறிப்பாக, இது வீட்டுச்; சூழலில் இருந்து வரும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதிப்பை அதிகரிக்கிறது.
சக்தி மற்றும் வளங்கள்
இலங்கை இன்றளவும் நீர்மின் உற்பத்தியில் சுமார் 40% தங்கியுள்ளதுடன் உயர்மட்ட இரவு நேர மின்சாரத்திற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக நீர்மின் உற்பத்தி அமைப்பெரிதும் சார்ந்துள்ளது. வறட்சியைக் கண்காணித்து எதிர்வுகூறுவதன் மூலம், உச்சக் கேள்விகளுக்கு நிகரான நீர் பாதுகாப்பிற்கும் நீர் ஒதுக்கீடு செய்யவும் முடியும். மேலும் மாற்று சக்தி வளங்களின் உற்பத்திக்கு பருவகால அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படலாம்
எ.கா. பராமரிப்பு மறுபரிசீலனை செய்யப்படலாம் அல்லது கூடுதல் எரிபொருள் இருப்புக்களினை பேணலாம்.
காலநிலை நேரடியாக மழையின் மூலமாகவும், மறைமுகமாக ஆவியாதல் மற்றும் ஆவியாதல் தூண்டுதல் மூலமாகவும நீரோட்டத்தை பாதிப்பதன் மூலம் வறட்சி மின்சார உற்பத்தி வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. எனினும் இலங்கை முழுவதும் காலநிலையானத வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன்படி சில பருவத்தில்; கிழக்கு சரிவுகளில் அதிக மழை பெய்யும் அதேவேளை பிறிதொரு பருவத்தில் இடங்களில் வறட்சி இருக்கும்.
மின்சாரத் திட்டத்தில் வறட்சியின் சமூக மற்றும் பொருளாதார தாக்கம்
எமத நாடு தொழில்துறை மற்றும் சேவை துறையில் அதிகம் சார்ந்ததாக மாறியுள்ள நிலையில், 25 ஆண்டுகளாக தேசிய மின்சாரத் தேவைகளில் 84% க்குமதிகமானளவு நீர் மின்சார உற்பத்தியினால் எளிதாக்கப்பட்டுள்ளது. மின்சாரத்திற்கான தேவைகள் உயர்ந்துள்ள நிலையில், சாத்தியமான புதிய நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கான வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன. நீர் பற்றாக்குறை இருக்கும் போது குறைந்த மின் உற்பத்தி மற்றும் மின்சார வழங்களில் சுமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றின் பாதகமான தாக்கங்கள் குடும்ப மட்டத்திலிருந்து தேசிய மட்டத்தினை நோக்கி நகர்த்தப்படுகின்றன.
மின்சார பற்றாக்குறை ஏற்படும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இழப்பு ஏற்படும், அதே நேரத்தில் வேலையின்மையிலும் கடுமையான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அடிப்படையில் சில குறித்த கைத்தொழில்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்படைவதுடன் மருத்துவதுறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சார வழங்களில் பற்றாக்குறை ஏற்படலாம். வறட்சி நேரடியாக அவசரகால சேவைகளுக்கு தேவையான நீர் மின் உற்பத்தியின் அளவை பாதிக்கிறது. தற்போது நீர் மின்சாரம் 40% மின்சார தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தாலும் கூட அதிகப்படியான அழுத்தங்கள் மற்றும் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் தொடர்ச்சியான முறிவுகள் காரணமாக தற்போதைய உள்நாட்டு மின்சாரத்திற்கான கேள்விகளை பூர்த்தி செய்ய அவசியமாகவும் உள்ளது. குறிப்பாக, இது ஆற்றல் சேமிப்பிலும், உயர் மினசார கேள்விகளை சந்திப்பதிலும் மற்றய வழிகளினை விடவும் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக உள்ளது
சக்தி கொள்கை மற்றும் காலநிலை
மின்சாரமானது ஒட்டுமொத்த சக்தி உற்பத்தியின்; ஒரு பகுதியே என்றாலும் சூரிய கதிர்வீச்சு மற்றும் உயிர்வளத்தின் நேரடி பயன்பாடு என்பன முக்கிய பங்களிப்;பை செய்துவருகின்றன. இவ்வாறு நீர் மின் உற்பத்தியை விட வெவ்வேறு மாற்று சக்தி வளங்கள் இருந்தாலும் கூட அவை காலநிலையால் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. இலங்கை சக்தி இழப்புகளைக் மற்றும் வீண்விரயத்தை குறைத்தக்கொள்வதனை இலகுவாக அடைந்து கொள்ள முயற்சிக்கிறது. இதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சுமார் 50மூ அல்லது அதற்கு மேற்பட்ட இழப்புகளைக் குறைக்கலாம்.
இலங்கை மின்சார சபை ஒப்பீட்டளவில் அதிகமாக 20% சக்தி உற்பத்தியை இழக்கின்றது.
முறையான் தணிக்கை நடவடிக்கைகைள், கண்காணிப்பு, கல்வி மற்றும் அமுலாக்கம் மற்றும் விழிப்புணர்வு மற்றும் குடிமக்களின் நடவடிக்கைகளின் மூலம் ஆகியவை மின்சாரத்திற்கான தேவையை குறைத்துக்கொள்ள முடியும்.
அதிகரித்த பயன்பாடானது, சூரியன் மற்றும் உயிர்ப் பொருள்களால் நேரடியாக உற்பத்தி செய்யப்படம் மாற்று சக்தி வளங்களினை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய வீட்டு வடிவமைப்புகள் மூலம் இன்று அதிகரித்துள்ள அறைகளுக்கான குளிரூட்டல சாதனங்களுக்கான தேவையை குறைத்து கொள்ளமுடிந்தது. மேலும் திறந்த வடிவமைப்புகள் செயற்கை விளக்குகளின் தேவையை குறைக்கலாம். மரங்கள் மற்றும் திரைச்சீலைகள் காற்றோட்டம் மற்றும் குளிரூட்டலுக்கான மின்சார தேவைகளை கணிசமானளவில் குறைக்கலாம்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களான சூரிய சக்தி சேகரிப்பு, காற்றாலை சக்தி; மற்றும் சிறு மின் சக்தி ஆலைகள் என்பன நாட்டின் சக்தி வளத்தில் கறைந்தளவு பங்காற்றினாலும் தற்போது வளர்ந்து வருகின்றதுடன் இவை அனைத்தும் எதிர்காலத்திற்கான சக்தி ஆதாரங்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சக்திவள உற்பத்தியில் வறட்சியின் அரசியல் ரீதியான விளைவுகள்
சக்திவள பற்றாக்குறைகள் நிலக்கரி மற்றும் வெப்ப மின் நிலையங்களுக்கு வழிவகப்பதன் மூலம் அரசாங்கங்களுக்கு அரசியல் அழுத்தத்தைத் கொடுக்கின்றன. மேலும் இவை சூழல் மாசுபாடு, பரந்த நிலங்கள் மற்றும் நெறிமுறையற்ற நிலம் கையகப்படுத்துதல், கடல், உள்நாட்டு நீர்வாழ் மற்றும் வளிமண்டல மாசுபாடு ஆகியவற்;ற்பு காரணமாவதுடன் இவற்றின் தாக்கம் இந்த நிவாரணத்தை விட அதிகமான பாதகங்களை; ஏற்படுத்துகின்றது. எமது நாட்டில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்கள் சுற்றுச்சூழல் கரிசனையுடைய குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. இன்று இயற்கை பேரழிவுகள் கூட அரசியல் மயமாக்கப்படுவதாலும், பாதிக்கப்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையானதை மட்டுமே எதிர்பார்க்கின்றமையினாலும் நிலைமை மோசமடைந்துள்ளது. மேலும் இவை துறைசார் ‘நிபுணர்களின்’ காற்றின் திசை தொடர்பிலான தொழில்முறை கருத்துக்களைக் கூட கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
சுற்றுச்சூழல்
வுpளக்கப்பட்ங்கள மற்றும் வரைபடங்களில், வறட்சி பெரும்பாலும் பிரகாசமான சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தால் குறிக்கப்படுகிறது, இவை பச்சை அல்லது நீல நிறத்திற்கு நேர்மாறான ஒரு தோற்றத்தை அளிக்கிறது. இது உண்மையில், ஒரு நீண்ட காலத்தில் நீர் கிடைப்பனவு இல்லாதபோது நம் சுற்றுச்சூழலக்கும் ஏற்படும் பாதிப்பினை விளக்கி நிற்கின்றது எனலாம்.
தாவரங்கள்: விவசாயமல்லாத மரங்கள் மற்றும் தாவரங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிக காரணம் உள்ளது. இவை இயற்கையாக நிகழக்கூடிய மற்றும் நோக்கத்தடனான தீ விபத்துக்கள் என்பவற்றின மூலம் அழிவடையும் சாத்தியத்தை கொண்டுள்ளது.
வனவிலங்கு: மனிதர்களைப் போலவே வனவிலங்குகளும் உயிர் வாழ்க்கைக்கு தண்ணீரைச் சார்ந்துள்ளது. நீர் நிலைக்களுக்கான போட்டி அல்லத தட்டப்பாடானது, சில விலங்கு இனங்கள் அழிவடைந்து போவதற்கும், விலங்கு – மனிதர்களுடனான மோதல்கள் ஏற்படவும் செய்கின்றது. கம்பீரமான யானைகள் இலங்கையின் பெருமையின் அடையாளமாக இருந்தாலும், அவை வசிக்கும் பகுதிகளில் நீர்ப்பற்றாக்கறை காரணமாக, அவை பெரும்பாலும் கிராம உணவு மற்றும் நீர் நிலைகளை நோக்கி வருவதன் மூலம் பல்வேறு சிக்கல்களை எற்படுத்தவும் செய்கின்றன. இந்நிலையானது விலங்குகளின் வாழக்கை முறையை வெகுவாக பாதிப்படையச் செய்கின்றது. மறுபுறம், இவ்விதம் உயிர்வாழ போராடும் விலங்குகளால் பல உயிர்களும், உடைமைகளும் அழிக்கப்பட்டும் வருகின்றன. வறட்சி இயற்கையாகவே நீர் ஆதாரங்களை குறிவைக்கின்றமையால் நீர் நிலைகளில் உயிர்வாழும் பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை முறையும் பாதிப்படைகின்றது.
கடலோர தாக்கங்கள்: வறட்சியால் குறிப்பாக கடலோர சுற்றுச்சூழல் அமைப்பிலும் கடல்பரப்பிலம் தாக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக கரையோர மணல் பாதுகாப்பு படைகள் உடைக்கும்போது நீர்பரப்பு மற்றும் அதில் வாழும் உயிரினங்கயும் வறட்சியால் பாதிப்பினை எதிர்கொள்கின்றன (மட்டக்களப்பு). மேலும் இது நனனீர் நிலைகளில் உப்பு நீர் ஊடுருவலை ஏற்படுத்தவும் செய்கின்றது. பெரும்பாலும் வறட்சி கடும் வெப்பநிலையுடன் தொடர்புடையது. அதிகரித்த கடல் வெப்பநிலை பவளப்பாறைகளின் அழிவு போன்ற கடலோர சுற்றுச்சூழல் அமைப்பில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. பருவகால மாற்றங்கள் மற்றும் வருடாந்த காலநிலை மாற்றங்களினால் பவளப்பாறைகளின் அழிவானது இன்று அதிகரித்து வருகின்ற பிரச்சினையாகவும் மாறிவருகின்றது.