மழைவீழ்ச்சி

மழைவீழ்ச்சி


மழைவீழ்ச்சி மற்றும் அதன் வேறுபாடுகள் வறட்சியில் மிகவும் நேரடி செல்வாக்கைக் கொண்டுள்ளது. பொதுவாக மழைவீழ்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருந்தால், மக்கள்; மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் அக்காலநிலக்கு பழக்கமாகிவிட்டால், இங்க வறட்சியின் தாக்கங்கள் ஏற்படும். மழைவீழ்ச்சி வேறுபாடு தொடர்பிலான வறட்சி கண்காணிப்புக்கள் காலத்திற்கு காலம் உரிய நேரத்தில் செய்யப்படல் வேண்டும். இதற்காக நாம் தேசிய அளவில் உற்பத்தி தரவுக் கொள்கைகள் மற்றும் விலையை நிர்ணயம் முதலான பல்வேறு நடைமுறைகளில் பணியாற்றி வருகின்றதோடு அவை தொடர்பிலான கண்காணிப்பை வெளிக்கொணர்ந்தும் வருகின்றோம். மழைவீழ்ச்சி பற்றாக்குறையை மதிப்பிடுவதற்கு நாம் செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவு, இணையத்தளங்களில் அணுகக்கூடிய சில தரவு மற்றும் எங்களது சொந்த தானியங்கி வானிலை நிலையங்கள் (நாங்கள் தடையற்ற அணுகலை வழங்குகிறோம்) ஆகியவற்றை இணைக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளோம். உதாரணமாக, படம் 1 இல், நடப்பு ஆண்டின் மழைவீழ்ச்சியை முந்தைய ஆண்டுகளின் மழைவிழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 2016 ஆம் ஆண்டில், மே 14-19 ஆம் தேதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு, முந்தைய ஆண்டுகளில் காணப்பட்டதை விட மழைவீழ்ச்சியானது மிகவும் குறைவாகவே பதிவாகியிரப்பதனை நாம் காணலாம். எனினும் வழக்கமாக ஆண்டின் பிற்பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும்.

படம் 1: தேகாடல்  (10-நாட்கள் அல்லது 3 மாத்திற்கான) இலங்கையின் மழைவீழ்ச்சி வேறுபாடு

செயற்கைக்கோள்கள் மற்றும் தரைத்தள அவதானிப்புகளிலிருந்து மதிப்பீடுகளின் படியான இலங்கையின் சராசரி மழைவீழ்ச்சியை படம் 1 காட்டிநிற்கின்றது. கடந்த 6 ஆண்டுகளாக ஜனவரி – டிசம்பர் வரையிலான மழைவீழ்ச்சி பாங்கானத கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. படம் 1 ஜனவரி, 2017 தொடக்கத்தில் இலங்கையில் ஏற்படும் என்பதை முன்னுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை முழுவதும் ஏப்ரல் மாதத்திலேயே மழைவிழ்ச்சியில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய மழைவீழ்ச்சி சராசரியை நீண்ட கால சராசரியுடன் ஒப்பிட்டு நோக்குவதானது வறட்சியைப் அவதானிப்பிற்கான ஒரு வெளிப்படையான வழியாகும். இச்செயன்முறையை படம் 2 இல் விளக்குகின்றது. இதன்படி, மழைவீழ்ச்சியானது நீண்டகாலமாக சராசரிக்கும் குறைவாகவே உள்ளது எனலாம்.

படம் 2: கடந்த நான்கு ஆண்டுகளின் தேகாடல்  மழை மற்றும் இலங்கையின் 2002-2019க்கான சராசரி

படத்தில் மெல்லிய வளைவானது, 2002-2018 ஆண்டு வரையிலான சராசரியைக் காட்டுகிறது – இந்த வருடாந்திர சுழற்சியானது ஒவ்வொரு ஆண்டுக்கும் மேற்கண்ட புள்ளிவிவரத்தில் மீள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சராசரியிலிருந்து விலகிச்செல்லும் ஈரமான மாதங்கள் (நீலம்) மற்றும் வறட்சியான மாதங்களாகவும் (Dekad) காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மூன்றாகப் பிரிக்கப்படுவதால் ஒரு னநமயன சுமார் 10 நாட்கள் அளவில் கொண்டதாக அமைகின்றது.

இலங்கையின் காலநிலை கணிசமானளவில் பிராந்திய வேறுபாட்டைக் கொண்டுள்ளது – இதனை அடையாளங்காண நாம் படம் 3 இல் காட்டப்பட்டுள்ளதை போன்று மாதாந்த மழைவீழ்ச்சி வேறுபாடுகள் மூலம் காணலாம் – அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து விலகியிருக்கும். வரைபடங்கள் அதிக நுணுக்கத்தைக் கொண்டள்ளதுடன் இதற்கேற்ப இவற்றை பிராந்திய அடிப்படையிலேயே வரைவிலக்கணம் செய்யவேண்டியும் ஏற்பட்டள்ளது.

படம் 3: 2018 மற்றும் 2019 க்கான மாதாந்திர மழைப்பொழிவு முரண்பாடுகள்